தளபதி விஜய்யின் கடைசி நாள் ஷூட், பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான Exclusive புகைப்படம்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது, அதன் அப்டேட்டுகளும் இணையத்தில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இன்று நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது படப்பிடிப்புகள் முடிவடைந்ததாக கூறும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் நெல்சனை தளபதி விஜய் கட்டியணைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் சன் பிக்சர்ஸ்.
மேலும் தளபதி விஜய் கடைசி நாள் பீஸ்ட் ஷூட்டிங் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே தீயாய் பரவி வருகிறது.
Here’s a special moment from Thalapathy @actorvijay’s last day of shoot for #Beast with director @Nelsondilpkumar@hegdepooja @anirudhofficial @manojdft @nirmalcuts @anbariv #BeastShootWrap pic.twitter.com/6f2Tj2a4lE
— Sun Pictures (@sunpictures) December 11, 2021