USA-வில் தளபதி விஜய்.. வெளிவந்த அவருடைய லேட்டஸ்ட் லுக் புகைப்படம்.. இதோ
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 68.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்காக விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு தளபதி 68 படத்தில் வரும் விஜய்யின் லுக்கை நவீன தொழில்நுட்பம் கொண்டு உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் புகைப்படம்
இந்நிலையில், USA-விற்கு சென்றுள்ள நடிகர் விஜய் விமான நிலையத்தில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக 3 சீரியல்களை முடிக்க பிளான் போட்ட விஜய் டிவி- இந்த தொடர்களா?
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri