விஜய்யின் லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கின்றனர்.
வரும் செப்டம்பர் 30ம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
விஜய் ஆடியோ லாஞ்சில் என்ன பேச போகிறார் என அவரது ரசிகர்கள் எல்லோரும் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பல்வேறு சர்ச்சைகள், அரசியல் என்ட்ரி பற்றி எல்லாம் அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்கெட் மோசடி
லியோ ஆடியோ லாஞ்சுக்கு என்ட்ரி டிக்கெட்டுகள் தற்போது ரசிகர்களுக்கு விநியோகிக்க தொடங்கி இருக்கின்றனர். இலவசமாக தரப்படும் அந்த பாஸ் மூலமாக சிலர் வியாபாரத்தையும் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
மேலும் பாஸ் வேண்டும் என்றால் அட்வான்ஸ் தொகை தரும்படி சிலர் மோசடியிலும் ஈடுபட்டு வருவதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் ட்விட்டரில் குற்றம் சாட்டி வருகின்றனர்.