ஜெயிலர் படத்தை ஓரங்கட்டிய விஜய்யின் லியோ.. வசூலில் புதிய சாதனை
லியோ
விஜய்யின் லியோ படத்தின் வசூல் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகிறது.
படம் வெளிவருவதற்கு முன் இருந்தே இந்த கேள்வி இணையத்தில் வைரலாக இருந்தது என்பது அனைவரும் அறிந்தது தான்.

முதல் நாள் வசூல் மாபெரும் அளவில் இருந்த நிலையில் கலவையான விமர்சனங்கள் லியோ படத்தின் வசூலை சற்று குறைக்க துவங்கியுள்ளது.
இதனால் உலகளவில் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடிக்க வாய்ப்பு குறைவு என்கின்றனர். ஆனால், முக்கியமான இடங்களில் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடித்துள்ளது.
புதிய சாதனை
இந்நிலையில் தற்போது Gulf Countries-ல் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் பின்னுக்கு தள்ளியுள்ளது லியோ. ஆம், ஜெயிலர் படம் Gulf Countries-ல் ரூ. 54.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது.

ஆனால், தற்போது லியோ ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video