ரஜினியின் ஜெயிலர் பட கலெக்ஷனுக்கு நடுவில் வந்த விஜய்யின் லியோ பட தகவல்- இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதா?
விஜய்யின் லியோ
நடிகர் விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளியான படம் வாரிசு, படம் ஹிட்டடிக்கும் என்று பார்த்தால் சொதப்பியது.
அடுத்து அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்ப்பார்க்கையில் மாஸ்டர் படத்தையடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜுடனே இணைந்தார்.
Seven Screen Studio தயாரிக்க அனிருத் இசையமைப்பில் தயாராகும் இப்படம் ரூ. 250 கோடி முதல் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.
த்ரிஷா மற்றும் விஜய் பல வருடங்களுக்கு ஒன்றாக இணைந்து நடித்து வருவதால் எதிர்ப்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

பட வியாபாரம்
இப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என பேசப்படுகிறது, ஆனால் இன்னும் உறுதியாகவில்லை. படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட வியாபாரம் சூடு பிடிக்க நடந்தது.
நமக்கு கிடைத்த தகவல்படி விஜய்யின் லியோ படத்தின் வியாபாரம் ரூ. 450 கோடி வரை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை படக்குழு மலேசியாவில் நடத்த பிளான் போட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.