இசை வெளியீடு இல்லை, வெற்றி கொண்டாட்டத்தை நடத்த போகம் விஜய்யின் லியோ படக்குழு- வெளிவந்த தகவல்
விஜய்யின் லியோ
தமிழ் சினிமா பெரிதும் எதிர்ப்பார்த்த விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முதல் வாரத்தை தாண்டி படம் ரூ. 450 கோடி மேல் வசூல் வேட்டை நடத்துகிறது.
போட்ட பணத்தை படக்குழு எடுத்துவிட்டாலும் சில இடங்களிலும் நஷ்டத்தை சந்திக்கும் அளவிற்கு உள்ளது.
ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இப்போது வர வர படத்தின் வசூல் டல் அடிக்கிறது என்கின்றனர்.

வெற்றி கொண்டாட்டம்
இந்த நிலையில் லாபத்தை பார்த்த சந்தோஷத்தில் இருக்கும் லியோ படக்குழுவினர் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை பிளான் செய்துள்ளார்களாம்.
விஜய் கலந்துகொள்ள இருக்கும் அந்நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி லியோ தயாரிப்பாளர் காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்துள்ளார்.
தளபதியை மேடையில் பார்க்க போகிற நாள் நினைத்து இப்போதே ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளார்கள். நவம்பர் 1ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
