விஜய்யின் லியோ முதல் நாளில் மட்டுமே 3000 காட்சிகள்- தமிழகத்தில் இல்லை, எங்கே தெரியுமா?
விஜய்யின் லியோ
தமிழ் சினிமாவில் தயாராகி வரும் பெரிய நடிகர்களின் படங்களில் ஒன்று விஜய்யின் லியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இப்படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்கிறார் த்ரிஷா.
படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.
ரசிகர்களும் படத்திற்காக அடுத்த அப்டேட் எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் நாள் காட்சி
இந்த நிலையில் விஜய்யின் லியோ படம் முதல் நாள் எத்தனை காட்சிகள் ஓட இருக்கிறது என்ற தகவல் வந்துள்ளது, அதுவும் தமிழகத்தில் கேரளாவில் படம் குறித்து தகவல் வந்துள்ள.
வரும் அக்டோபர் 19ம் தேதி லியோ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதாக கூறப்பட்டள்ளது. தமிழகத்தை தாண்டி கேரளாவில் 90% திரையரங்குகளில் படம் வெளியாக இருக்கிறதாம்.
கேரளாவில் உள்ள 650 திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் முதல் நாள் இந்த படம் சுமார் 3000 காட்சிகள் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

பாக்கியாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வரும் கோபி, ராதிகா பார்த்தாரா?- பாக்கியலட்சுமி சீரியல் வைரல் வீடியோ