விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பு இப்போது எங்கே நடந்துகொண்டிருக்கிறது தெரியுமா?
விஜய்யின் லியோ
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் "லியோ".
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.
இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போது "லியோ" படத்தின் முக்கிய பாடல் ஒன்றின் படப்பிடிப்பு இன்று சென்னையில் நடக்க போவதாக தகவல் வந்துள்ளது.
இதற்காக பல நடன கலைஞர்களுடன் ரிகர்சல் முடிந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

50 வயதிலும் இளமையாக காணப்படும் ஐஸ்வர்யா ராய் அழகிற்கு இதுதான் காரணமா?- Beauty Tips