தெலுங்கில் மட்டுமே லியோ இத்தனை கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா..! வேற லெவல் மாஸ் காட்டும் விஜய்
லியோ படம்
மாஸ்டர் படத்திற்குப்பின் விஜய் லோகேஷ் இணைந்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தை லலித் குமார் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். 2023ஆம் ஆண்டில் திரையுலக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். 13 ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கிறது. மேலும் சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இன்னும் சில முக்கிய நட்சத்திரங்கள் கூட நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் லியோ கண்டிப்பாக லோகேஷ் கனகராஜின் LCUவில் இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது நடக்குமா இல்லையா என பொறுத்திருந்து பார்ப்போம்.
லியோ படத்தில் தன்னுடைய காட்சிகளை சமீபத்தில் தான் விஜய் நிறைவு செய்தார். விஜய்யுடன் காட்சிகள் எடுக்கப்பட்டு முடிந்துவிட்டது என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். லியோ படத்தின் பிஸ்னஸ் இதுவரை ரூ. 400 கோடிக்கும் மேல் நடந்துள்ளது என ஏற்கனவே தகவல் ஒன்று வெளிவந்தது.
இத்தனை கோடியா
சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ, திரையரங்க உரிமைகள் என அனைத்தையும் சேர்த்து லியோ திரைப்படத்தின் பிஸ்னஸ் ரூ. 400 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில், இதில் தெலுங்கு திரையரங்க உரிமை மட்டுமே ரூ. 25 கோடி வரை விற்பனை ஆகியுள்ளது என லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனால் கண்டிப்பாக லியோ திரைப்படம் தெலுங்கில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் தான் நஷ்டத்தை சந்திக்காமல் இருக்கும் என திரை வட்டாரத்தில் தற்போதே பேச துவங்கிவிட்டனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.
இளம் நடிகருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணமா.. வெளிவந்த புதிய தகவல்