மாஸ் ரெக்கார்ட் செய்துள்ள விஜய்யின் லியோ படத்தின் டிரைலர்- கெத்து காட்டும் தளபதி
விஜய்யின் லியோ
விஜய்யின் லியோ தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்ட சாதனை படைக்க தயாராகி இருக்கும் படம்.
வாரிசு படம் கேரளா, ஓவர்சீஸ் போன்ற இடங்களில் வெற்றிப்பெற்றாலும் சில இடங்களில் நஷ்டத்தை சந்தித்தது. இப்படத்தின் சில சறுக்கல்களுக்கு பிறகு விஜய் நடித்துள்ள இந்த லியோ திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என பலர் நடித்துள்ளார்கள்.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ம் தேதி நடைபெற வேண்டியது, ஆனால் சில காரணங்களால் நடக்கவில்லை.
எனவே வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு நேற்று மாலை வரப்பிரசாதமாக அமைந்தது லியோ பட டிரைலர்.
டிரைலர் சாதனை
லியோ பட டிரைலர் வெளியான 20 நிமிடத்திலேயே 1 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் இதுவரை விஜய்யின் லியோ பட டிரைலர் 27 மில்லியன் பார்வையாளர்களையும் 2.5 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.