பொறி பறக்கும் லியோ புது போஸ்டர்.. இந்த விஷயத்தை கவனித்தீர்களா?
விஜய் நடித்து இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதனால் படத்தின் டீஸர் ட்ரைலர் உள்ளிட்டவை எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ரசிகர்களுக்காக ஒரு புது போஸ்ட்டரை இன்று மாலை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

போஸ்டர்
சரியாக 6 மணிக்கு லியோ படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. தீப்பொறி பறக்க்ம் அந்த போஸ்ட்டரை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
"Keep calm and prepare for battle" என இந்த போஸ்டரில் குறிப்பிட்டு இருக்கின்றனர். இதற்கு முந்தைய போஸ்டர்களில் “Keep calm and avoid the battle' எனவும், 'Keep calm and plot your escape' என இருந்தது.
அதனால் லியோ படத்தின் கதை எப்படி இருக்க போகிறது என ஒரு ஹிண்ட் கிடைத்து இருக்கிறது.