தமிழகத்தை தாண்டி முக்கிய இடத்தில் பல கோடி தாண்டிய விஜய்யின் லியோ பட ப்ரீ புக்கிங்- மாஸ் காட்டும் தளபதி
விஜய்யின் லியோ
எடுடா மேளம் அடிடா தாளம் என படு கொண்டாட்டத்தை நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் விஜய்யின் ரசிகர்கள்.
லியோ படம் குறித்து நாளுக்கு நாள் மாஸான தகவல்களாக வந்து கொண்டிருக்கிறது, ப்ரீ புக்கிங்கும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நடந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று முதல் ப்ரீ புக்கிங் தொடங்க இருக்கிறது, ஆனால் கேரளா, கர்நாடகா, USA என எல்ல இடங்களிலும் ப்ரீ புக்கிங் அமோகமாக நடக்கிறது.
கேரளா விவரம்
தமிழகத்தை தாண்டி விஜய்யின் கோட்டை கேரளா என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
அங்கு லியோ படத்திற்கான டிக்கெட் விற்பனை படு சூடாக நடக்கிறதாம், இன்னும் சொல்ல போனால் டிக்கெட்டிற்கு ரசிகர்கள் அடித்துக் கொள்கிறார்கள் என்றே கூறலாம். ப்ரீ புக்கிங் விவரப்படி கேரளாவில் இதுவரை ரூ. 5 கோடி வரை வசூலித்துவிட்டதாம்.
கண்டிப்பாக முதல் நாள் வசூலில் படம் ரூ. 10 கோடியை எட்டிவிடும் என கூறப்படுகிறது.

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
