விஜய்யின் லியோ
மாஸ்டர் படத்தை இயக்கி வெற்றி கொடுத்த லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்து விஜய் ரசிகர்களுக்கு கொடுக்கப்போகும் படம் தான் லியோ.
இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது, அங்கு படக்குழு இருக்கும் போது நிலநடுக்கம் எல்லாம் ஏற்பட்டது, ரசிகர்கள் அதிகம் பயந்தார்கள்.
ஆனால் யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை, சென்னை திரும்பிய படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார்கள்.

ஆடியோ வெளியீட்டு விழா
தற்போது விஜய்யின் லியோ பட ஆடியோ வெளியீட்டு விழா குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது படத்தின் ஆடியோ விழாவை சென்னையில் நடத்த வேண்டாம் என, அதாவது சென்னைக்கு வெளியே நடத்தலாம் என்று விஜய் கூறிவிட்டாராம்.
எனவே மதுரை, திருச்சி அல்லது கோயம்புத்தூரில் இப்பட விழா படு விமர்சையாக நடைபெறும் என தயாரிப்பாளர் லலித் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேற காரணமே இதுவா?- செம பிளான் பா