மீண்டும் லோகேஷுடன் இணையும் விஜய்.. லியோ 2வா?
விஜய் - லோக்கேஷ்
விஜய் - லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக மாஸ்டர் படத்திற்காக இணைத்தனர். இப்படம் கொரோனா நேரத்தில் வெளிவந்த திரையரங்கிற்கு விடிவுகாலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
மாபெரும் மாஸ்டர் படத்தின் வெற்றியை மீண்டும் விஜய் - லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் இணைந்தனர். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
விமர்சன ரீதியாக பின்னடைவைவு ஏற்பட்டாலும் கூட வசூலில் உலகளவில் ரூ. 598 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. லியோ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் - லோகேஷ் இணைவார்கள் என ஏற்கனவே கேள்வி எழுந்தது. கண்டிப்பாக அது நடக்கும் என லோகேஷ் கூறியிருந்தார்.
தளபதி விஜய் தற்போது தன்னுடைய 68வது படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து 69, 70 என இடையில் இரு திரைப்படங்கள் இருக்கும் நிலையில் விஜய்யின் 71வது படத்தை லோகேஷ் தான் இயக்க போகிறார்.
அது லியோ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்பு அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 68 படத்திற்கு பின் இரண்டு வருடங்கள் அரசியலுக்காக சினிமாவில் இருந்து விஜய் பிரேக் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது.
லியோ 2வா?
அப்படி பிரேக் எடுத்து, மீண்டும் அவர் சினிமாவிற்கு வருவதற்கு இரண்டு வருடங்கள் ஆகும் பட்சத்தில் கிட்டதட்ட 2026ல் தான் மீண்டும் அவர் படங்களில் நடிக்க துவங்க முடியும். அப்படியென்றால் 69வது மற்றும் 70வது படத்தில் நடித்து முடிக்க 2027 அல்லது 2028 வரை ஆகிவிடும்.
அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜ் அடுத்த ஆண்டு தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார், இதன்பின் கைதி 2 படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதுமட்டுமின்றி LCU-வில் இருந்து ரோலெக்ஸ் அல்லது வேறொரு கதாபாத்திரத்தின் படத்தை கூட லோகேஷ் இயக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த கமிட்மெண்ட்ஸ் அனைத்தையும் முடித்துவிட்டு விஜய்யின் 71வது படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இது நடக்கிறதா இல்லையா என்று.
You May Like This Video