விஜய் - லோகேஷ் இணையும் தளபதி 67 படம் எப்படி இருக்கும்.. இயக்குனர் கூறிய மாஸ் தகவல்

By Kathick Jul 23, 2022 05:30 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி

மாஸ்டர் படத்தின் மூலம் முதன் முதலில் இணைந்தது தான், லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி எப்போது அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள்.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த கூட்டணி மீண்டும் அமையவிருக்கிறது. ஆம், விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கவிருக்கும் திரைப்படம் முழுமையாக ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

விஜய் - லோகேஷ் இணையும் தளபதி 67 படம் எப்படி இருக்கும்.. இயக்குனர் கூறிய மாஸ் தகவல் | Vijay Lokesh Kanagaraj Movie Will In This Type

தளபதி 67 எப்படி இருக்கும்

இதனால், கண்டிப்பாக இப்படத்தில் விஜய் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், இப்படத்தை குறித்து இயக்குனரும், லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பருமான ரத்னகுமார் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

இதில் " இம் டஸ்ட்ரியின் மிகப்பெரிய ஹிட் படமாக இருக்கும். 100% லோகேஷின் படமாக இது இருக்கும் " என்று கூறியுள்ளார். இதன்முலம் தற்போது தளபதி 67 படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மாபெரும் அளவிற்கு கூடியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US