மாநாடு படத்தில் முதலில் நடிக்கவிருந்தது தளபதி விஜய்யா! புகைப்படத்தால் நழுவிய வாய்ப்பு..

Jeeva
in பிரபலங்கள்Report this article
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று மாஸ்ஸாக வெளியான திரைப்படம் தான் மாநாடு.
இப்படம் நேற்று திரைக்கு வருவதற்குள் பல தடைகளை கடந்து தான் வந்தது, மேலும் இப்படம் வெளியானது முதல் மிக சிறந்த விமர்சனங்களையே பெற்று வருகிறது.
பல வருடங்கள் கழித்து சிம்பு நடிப்பில் பிளாக் பஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மாநாடு படத்தில் முதலில் நாடியிருந்ததே தளபதி விஜய் தான் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மாசு என்கிற மாசிலாமணி படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் விஜய் நடிப்பதாக இருந்ததாம்.
ஆனால் இணையத்தில் லீக்கான புகைப்படங்களால் தளபதி விஜய் மாநாடு படத்தில் நடிப்பதை நிராகரித்தாராம்.
ஆம் விஜய் மற்றும் வெங்கட் பிரபு நண்பர்களுடன் பார்ட்டி நடந்துள்ளது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் விஜய் மாநாடு படத்தின் வாய்ப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
இது இத்தனை பிரபல பத்திரிகையாளர்கள் தெரிவித்து உள்ளனர்...