தன் திருமண நாளில் விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு.. என்ன ஆக போகுதோ
நடிகர் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இதனால் சினிமாவில் இருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜனநாயகன்'தான் விஜய்யின் கடைசி திரைப்படமாகும். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவிருக்கிறது.
விஜய் - சங்கீதா
விஜய் - சங்கீதா குறித்து பலவிதமான வந்தந்திகள் பரவி வருகின்றன. ஆனால், அவை யாவும் உண்மையில்லை என பத்திரிகையாளர்கள் சிலர் விளக்கம் அளித்தும் வருகிறார்கள். நடிகர் விஜய் வழக்கம் போல் தனது ஸ்டைலில் வதந்திகளுக்கு விளக்கம் அளிக்காமல் இருந்து வருகிறார்.
அதிரடி முடிவு
இந்த நிலையில், தன் திருமண நாளான ஆகஸ்ட் 25ம் தேதி அதிரடியாக முடிவு ஒன்றை விஜய் எடுத்துள்ளார். அதுவும் அரசியல் கட்சி தலைவராக விஜய் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ஆம், வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது.
முதல் மாநாடு ஏற்கனவே விக்கரவாண்டியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மகிழ்ச்சியுடன் கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் "என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்" என பதிவு செய்துள்ளார்.
என்ன ஆக போகுதோ
விக்கரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் 10 லட்சம் மக்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அப்போதே பெரும் பரபரப்பு மாநாட்டில் நிலவியது. மதுரை என்பது விஜய்க்கு அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ள இடமாகும். என்ன ஆக போகுதோ, பொறுத்திருந்து பார்ப்போம்.

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri
