மாஸ்டர் பொங்கல் வெளியீடு உறுதி, சென்சார் சான்றிதழ் உடன் வெளியான புதிய போஸ்டர் இதோ..
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி போனது, ஆனால் அடுத்த மாதம் பொங்கல் அன்று வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில், தற்போது சென்சார் சான்றிதழ் உடன் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஆம் மாஸ்டர் திரைப்படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளது என புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படம் அடுத்த மாதம் 13 ஆம் தேதி பொங்கல் அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
And it's here! ?
— XB Film Creators (@XBFilmCreators) December 24, 2020
U/A certification for namma #Master.
See you soon ? #MasterUAcertified pic.twitter.com/RLH81FnFVt