பேருந்து மீது ஏறிய விஜய், ரசிகர் கூட்டத்தில் இருந்து பறந்து வந்த பூமாலைகள்!
நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர் தற்போது நடித்து வரும் GOAT படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தினமும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் வந்து குவிந்துவிடுகிறது.
மாலை நேரத்தில் விஜய் வீட்டுக்கு கிளம்பும் முன் அவர்களை சந்தித்து விட்டு தான் தினமும் கிளம்புகிறார். அந்த வீடியோக்களும் தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது.
பஸ் மீது ஏறிய விஜய்
இன்று தன்னை காண அதிக அளவு ரசிகர்கள் குவிந்து இருப்பதை கவனித்த விஜய். கேட்டுக்கு உள்ளே நிறுத்தப்பட்டு இருந்த பஸ் மீது ஏறி ரசிகர்களை பார்த்திருக்கிறார்கள்.
பூமாலை உடன் வந்திருந்த ரசிகர்கள் அதை விஜய்யை நோக்கி வீசி தங்கள் அன்பை காட்டி இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..
#ThalapathyVijay sir's love for his Nanbas and Nanbis is #TheGreatestOfAllTime ❤️@actorvijay pic.twitter.com/olJecIKUpk
— TheRoute (@TheRoute) January 11, 2024