ரீ என்ட்ரி கொடுக்கும் விஜயகாந்த்.. இயக்குனர் கூறிய அதிரடி தகவல்

By Kathick Jun 19, 2022 03:10 PM GMT
Report

நடிகர் விஜயகாந்த்

தனது கம்பீரமான நடிப்பினால் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதின் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், ஊமை விழிகள் உள்ளிட்ட பல படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

அரசியலில் களமிறங்கிய விஜயகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து விலக ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டவுடன் முழுமையாக சினிமாவில் இருந்து விலகிவிட்டார். சமீபத்தில் கூட மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

ரீ என்ட்ரி கொடுக்கும் விஜயகாந்த்.. இயக்குனர் கூறிய அதிரடி தகவல் | Vijay Milton About Vijaykanath In His Movie

பல வருடங்கள் கழித்து நடிகர் விஜயகாந்த் மீண்டும், விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் எனும் படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் விஜயகாந்த் கதாபாத்திரத்திரம் குறித்து பேசியுள்ளார்.

ரீ என்ட்ரி குறித்து பேசிய இயக்குனர்

இதில் " விஜயகாந்த் பகுதிகளை நாங்கள் இன்னும் படமாக்கவில்லை, மேலும் அவர் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதால் அவரது உடல்நிலை காரணமாக தாமதமாகிறது. ஆனால் அவரையே வைத்து படமாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம். படத்தின் அவரது இருப்பு மிகவும் அவசியமானது. ஆனால் அவர் படத்தில் தோன்றுகிறாரா அல்லது அவரது குரலில் தோன்றுகிறாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் " என்று கூறியுள்ளாராம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US