நடிக்கவே தெரியாதாமா உனக்கு.. முதல் நாளே ஷாக் ஆன இயக்குனர்! ஆனால் அதற்கு பின் நடந்த விஷயம்
காதல் படத்தில் ஹீரோயினாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனவர் சந்தியா. அவரை காதல் சந்தியா என அதற்கு பிறகு அழைக்கும் அளவுக்கு அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் சந்தியா.
காதல் படத்திற்கு ஹீரோயின் தேடிக்கொண்டிருந்த பாலாஜி சக்திவேல் ஒரு வீடியோவை பார்த்து சந்தியாவை ஹீரோயினாக போடலாம் என முடிவு செய்தாராம். ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தான் அந்த வீடியோவை அனுப்பி சிபாரிசு செய்து இருக்கிறார். இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
நடிக்க தெரியாததால் அதிர்ச்சி
சந்தியா காதல் படத்தில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி முதல் இரண்டு நாட்களுக்கு அவர் நடிப்பை பார்த்து இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு அதிருப்தி தானாம். நடிக்கவே தெரியாததால் ஹீரோயினை மாற்றிவிடலாம் என்று கூட அவர்கள் இருவரும் பேசிக்கொண்டார்களாம்.
ஆனால் முன்றாவது நாள் ஷூட்டிங்கில் அவர் நடிப்பை பார்த்து அவர்கள் வியந்துவிட்டார்களாம். அதற்கு பிறகு அனைத்து காட்சிகளையும் சந்தியா ஒரே டேக்கில் நடித்து கொடுத்து இருக்கிறார்.
[]

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
