அஜித்துடன் நடித்துள்ள நடிகை மீனா இதுவரை விஜய்யுடன் நடிக்காதது ஏன்?- இதான் விஷயம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அஜித்-விஜய். இவர்களது படங்களை வைத்து ரசிகர்கள் ஏதாவது சண்டையில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள்.
சில கருத்துக் கணிப்புகள் முக்கியமாக இவர்களை ஒப்பிட்டே நடக்கும்.
தற்போதும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதாவது நடிகை மீனா இதுவரை அஜித்துடன் வில்லன், சிட்டிசன், ஆனந்த பூங்காற்றே என்று 3 படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் இதுவரை விஜய்யுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை, ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார். விஜய்யுடன் ஏன் நடிக்கவில்லை என கேள்விகள் எழும்புகின்றன.
உண்மையில் மீனாவிற்கு விஜய்யுடன் ப்ரியமுடன், பிரண்ட்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். அப்போது வேறு படங்களில் கமிட்டாகி இருந்ததால் அவரால் விஜய்யுடன் நடிக்க முடியாமல் போனதாம்.