விஜய் ஓகே செய்த கதை.. ஆனால் விக்ரம் நடித்து பெரிய பிளாப்! என்ன படம் தெரியுமா
நடிகர் விஜய் தற்போது கோலிவுட்டில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். கதை தேர்வில் அதிகம் கவனம் செலுத்துபவர் அவர். ஒரு படம் நடித்து கொண்டிருக்கும்போதே அடுத்த ப்ராஜெக்ட்டுக்காக கதைகளை கேட்டு அதில் சிறந்த ஒன்றை தேர்வு சித்து நடிப்பார்.
அப்படி விஜய் ஓகே செய்த ஒரு கதை, சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக, அதில் வேறொரு ஹீரோ நடிக்கிறார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய பிளாப் ஆகிவிட்டது.

10 எண்றதுக்குள்ள
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் - சமந்தா நடித்த 10 எண்றதுக்குள்ள படம் தான் அது. பல வருடங்களுக்கு முன்பே விஜய் மில்டன் அந்த கதையை தயார் செய்து வைத்திருந்தாராம். அவர் விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கி இருக்கிறார்.
அதை ஏவிஎம் நிறுவனத்திற்கு அனுப்பி தயாரிக்கும்படி கேட்டிருக்கிறார் விஜய். முக்கிய ரோலில் பிரகாஷ் ராஜை நடிக்க வைக்கவும் முடிவாகி இருக்கிறது.
ஆனால் சில காரணங்களால் படம் டிராப் ஆகிவிட்டதாம். அதற்கு பிறகு தான் விக்ரம் மற்றும் சமந்தா ஆகியோரை வைத்து படம் எடுத்து இருக்கிறார் விஜய் மில்டன். ஆனால் வரவேற்பு கிடைக்காததால் படம் பிளாப் ஆகிவிட்டது.

You May Like This Video