நடிகர் விஜய் தனது திரை வாழ்க்கையில் தவறவிட்ட மாபெரும் ஹிட் திரைப்படங்கள்.. இதோ பாருங்க
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு பின் தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இதுவே இவருடைய கடைசி படம் ஆகும். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவிற்கு பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே போல் அவர் நிராகரித்து தவறவிட்ட சூப்பர்ஹிட் படங்களும் ஏறலாம் ஆகும்.
விஜய் தவறவிட்ட ஹிட்ஸ்
அப்படி அவர் என்னென்ன திரைப்படங்களை தவறவிட்டார் என்று பார்க்கலாம். உன்னை நினைந்து, காக்க காக்க, அனேகன், முதல்வன், தீனா, பொன்னியின் செல்வன், சண்டைக்கோழி, ஆட்டோகிராஃப், சிங்கம், ரன், தூள், உள்ளத்தை அள்ளித்தா போன்ற வெற்றி திரைப்படங்களை விஜய் தவறவிட்டுள்ளார்.

விஜய் தவறவிட்ட இந்த அனைத்து திரைப்படங்களும், அப்படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர்களின் திரை வாழ்க்கையை மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.