பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன், விஜய்யின் மனைவி சங்கீதா அப்படித்தான்.. ஷோபா ஓபன் டாக்
விஜய்
தமிழ் சினிமாவின் என்றும் இளைய தளபதியாக இருக்கும் விஜய் தனது 69வது படமான கடைசிப்படத்தில் நடித்து வருகிறார்.
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வைத்துள்ளனர்.
இந்த படப்பிடிப்பு இடைவேளையில் தான் வெற்றிகரமாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ம் ஆண்டு விழாவையும் கோலாகலமாக கொண்டாடினார் விஜய்.
இதில் எப்போதும் போல மாஸாக பேசி கலக்கினார், அவரது பேச்சு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அம்மா ஷோபா
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பேட்டியில் கூறிய விஷயம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதில் விஜய்யின் மனைவி சங்கீதா குறித்து பேசுகையில், சங்கீதா ரொம்ப நல்ல பெண், முழுக்க முழுக்க House Wifeஆக இருக்கிறார்.

அவரை போல பிள்ளைகளிடம் பாசத்தை கொட்டி வளர்ப்பவரை பார்க்கவே முடியாது. அதை நான் கண்களால் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
பிள்ளைகளுக்கு எது வேண்டுமோ வேலை செய்பவர்களிடம் சொல்ல மாட்டார், எதுவாக இருந்தாலும் தன் கைகளால் மட்டும்தான் கொடுப்பார் என கூறியுள்ளார்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    