விஜய் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை.. இன்று தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு

Kathick
in பிரபலங்கள்Report this article
பிரியங்கா சோப்ரா
தளபதி விஜய் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தமிழன். இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா.
இதன்பின் பாலிவுட் பக்கம் திரும்பிய பிரியங்கா சோப்ரா தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க துவங்கினார். பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தையும் பிடித்தார்.
இதை தொடர்ந்து ஹாலிவுட் சினிமாவில் களமிறங்கிய பிரியங்காவிற்கு தொடர்ந்து ஆங்கில பட வாய்ப்புகள் குவிந்தன. Baywatch, The Sky Is Pink, The Matrix Resurrections என பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
சொத்து மதிப்பு
தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இந்த நிலையில், பிரியங்கா சோப்ரா சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை பிரியங்கா சோப்ராவின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 620 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 14 கோடி முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.