விஜய்யின் இந்த படத்தை கிளாப் செய்து தொடங்கி வைத்த ரஜினி! என்ன படம் தெரியுமா?
தளபதி விஜய் தற்போது தமிழ் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வசூல் புரிந்து சாதனை படைத்து வருகிறது.
அதன்படி மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு, விஜய் நடித்து பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் இருக்கிறது.
மேலும் விறுவிறுப்பாக நடந்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைப்படம் எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சந்திரலேகா, இப்படத்தில் விஜய்யுடன் வனிதா விஜயகுமார் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தின் முதல் காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினி தான் கிளாப் செய்து தொடங்கி வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்