தளபதி விஜய்யின் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர் ! யார் தெரியுமா?

Vijay Parthiban
By Jeeva Nov 25, 2021 01:40 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது.

மேலும் தற்போது இப்படத்தை இந்தியில் அபிஷேக் பச்சனை கதாநாயகனாக வைத்து ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் "எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும்" என கூறியிருக்கிறார். 

தளபதி விஜய்யின் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர் ! யார் தெரியுமா? | Vijay Movie Parthiban


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US