நடிகர் அஜித்திற்கு தனது சூப்பர்ஹிட் பாடலை போட்டு காமித்த விஜய்.. தல என்ன சொன்னார் தெரியுமா

vijay ajith kumar a.l.vijay thalaiva vaanganna vanakangana
By Kathick Sep 23, 2021 05:40 AM GMT
Report

இயக்குனர் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தலைவா.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து அமலா பால், சந்தானம், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் இடம்பெற்ற 'வாங்கன்னா வணக்கங்கனா' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆனது.

இந்நிலையில் இந்த பாடலை இசையமைத்து முடித்தபோது இயக்குனர் விஜய்யும், தல அஜித்தும் ஒரே ஹோட்டலில் தான் இருந்துள்ளார்கள்.

அப்போது, தல அஜித்தை நேரில் சந்தித்து பேசிய இயக்குனர் விஜய், அஜித்துக்கு தனது தலைவா படத்தின் 'வாங்கன்னா வணக்கங்கனா' பாடலை முதன் முதலில் போட்டு காமித்துள்ளார்.

இந்த பாடலை கேட்ட அஜித் 'பாடல் சூப்பர் இருக்கு, இன்னொரு வாட்டி போடுங்க கேப்போம்' என்று கூறினாராம்.

இதனை இயக்குனர் விஜய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US