வாரிசு
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தற்போது பிரபலங்கள் பலரும் மேடையில் படம் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறி வருகிறார்கள்.
மேடையில் ஜானி மாஸ்டர் மற்றும் ஹீரோயின் ராஷ்மிகா இருவரும் மேடையில் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடி இருக்கின்றனர். அது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

விஜய் அப்படி ஒரு நாளும் செய்ததில்லை..
விஜய் உடன் வாரிசு படத்தில் ஒரு வருடமாக நடித்தது பற்றி பிக் பாஸ் புகழ் நடிகை சம்யுக்தா பேசி இருக்கிறார்.
"விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாளும் போன் பயன்படுத்தியது இல்லை. கேரவனுக்கு கூட போகமாட்டார். நான் அங்கு புதுமுகம், ஆனால் படத்தில் நடித்த மற்றவர்கள் எல்லாரும் லெஜண்ட்ஸ்" என சம்யுக்தா கூறி இருக்கிறார்.
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தனலட்சுமியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?