விஜய்க்காக 30க்கும் மேற்பட்ட ஹேர் ஸ்டைல்.. ஒரு பக்கம் வரவேற்பு, மறுபக்கம் கிண்டல்
லியோ
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

நேற்று லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஏராளமான புகைப்படங்கள் வெளிவந்தது.
இதற்க்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பில் சஞ்சய் தத் இணைந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இதில் விஜய்யின் ஹேர் ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்தது.
ஹேர் ஸ்டைல்
வழக்கமாக இல்லாமல் வித்யாசமான லுக்கில் செம மாஸாக இருந்தார். ஆனால், சில நெட்டிசன்கள் விஜய்யை கலாய்த்து மீம் போட்டு வந்தனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜய்யின் ஹேர் ஸ்டைல் பற்றிய பேச்சு படுவைரலானது.

இந்நிலையில், 30க்கும் மேற்பட்ட ஹேர் ஸ்டைலை உருவாக்கி அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்து தான் விஜய்க்கு இப்படியொரு லுக்கை லோகேஷ் கொடுத்துள்ளாராம். இதுவே விஜய்யின் புதிய லுக்கின் பின்னணி என கூறப்படுகிறது.
ஒரு படத்திற்காக இரண்டு வருட சினிமா வாழ்க்கையை பணயம் வைக்கும் சாய் பல்லவி