பிரபல இயக்குனர் விஜய்க்கு சொன்ன கதை, நைஸாக விலகிய தளபதி
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் பீஸ்ட் படம் தற்போது தயாராகி வருகின்றது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் லோகேஷ், அட்லீ ஆகியோர் இயக்கத்தில் நடிக்கப்போவதாக பல தகவல்கள் உலா வருகின்றது.
அதோடு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்திலும் நடிக்கப்போவதாக சில செய்திகள் வந்துக்கொண்டு தான் உள்ளது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் பி.வாசு சமீபத்தில் விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொன்னதாகவும், விஜய் மூத்த இயக்குனர் என்பதால் ஒன்றும் சொல்லாமல், சாமளித்துவிட்டு வந்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், விஜய் தற்போதெல்லாம் இளம் இயக்குனர்களிடம் படம் செய்வதையே விரும்புகின்றார், அதனால் தான் பெரிய இயக்குனர்கள் படங்களில் நடிக்க விரும்புவது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.