காதலுக்கு மரியாதை நான் நடிக்க வேண்டியது.. விரக்தியாக பேசிய பிரபல நடிகர்
விஜய் கெரியரில் முக்கிய ஹிட் படங்களில் ஒன்று காதலுக்கு மரியாதை. தற்போது அஜித்தின் மனைவியான ஷாலினி தான் விஜய்க்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்து இருப்பார்.
காதலுக்கு மரியாதை படத்தில் வரும் பாடல்களும் பெரிய ஹிட். 'என்னை தாலாட்ட வருவாளோ' பாடல் தற்போதும் ரசிகர்களை கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது.
நிராகரித்த ஹீரோ.. வாய்ப்பை பெற்ற விஜய்
முதலில் காதலுக்கு மரியாதை படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் அப்பாஸை தான் இயக்குனர் பாசில் அணுகி இருக்கிறார். ஆனால் அவரது மேனேஜர் ஏற்கனவே பல படங்ளையே ஒப்புக்கொண்டு வைத்திருந்ததால் இந்த படத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை அவருக்கு வந்திருக்கிறது.
மேனேஜர் ஒப்பந்தம் செய்திருந்த படங்களில் இருந்து வெளியில் வந்த பிறகு பார்த்தால் அதற்குள் பாசில் விஜய்யை காதலுக்கு மரியாதை படத்தில் புக் செய்துவிட்டாராம்.
அதனால் ஒரு முக்கிய படம் மிஸ் ஆனதாக அப்பாஸ் விரக்தியில் பேசி இருக்கிறார்.
You May Like This Video

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
