விஜயை பார்க்க மனைவியுடன் காத்திருந்த நிர்வாகி.. மனைவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஒன்றிய வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அவருக்கு பதிலாக அவரது சகோதரர் எழில் தனது மனைவியுடன் விஜயை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வந்த நிலையில், இந்நிலையில் நீண்ட நேரமாக வெளியே அவர் காத்திருந்துள்ளார்.
அப்போது அவரது மனைவி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த ரசிகர்கள் அவரை தண்ணீர் தெளித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.
தனது மனைவி மயக்கம் அடைந்த பிறகும் மாநில பொறுப்பாளர்கள் யாரும் வெளியில் வந்து பார்க்கவில்லை என்று கோபமடைந்த எழில் மாதனூர் மேற்கு ஒன்றிய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு சென்றுள்ளாராம்.
இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.