விஜய் இல்லை அங்கு சென்றது விஜய் சேதுபதி தான், படக்குழு வெளியிட்ட வீடியோ..
மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மரைக்காயர் அரபிக்கடலில் சிங்கம்.
வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படம் இந்தியளவில் அனைத்து மொழிகளிலும் அடுத்த மாதம் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் விஜய் சேதுபதி விசிட் அடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேலும் காலை அந்த வீடியோவை விஜய் அப்படத்தின் ஷூட்டிங்கில் விசிட் அடித்தது போல புகைப்படம் பரவி வந்தது. ஆனால் தற்போது விஜய் சேதுபதி தான் அங்கு சென்றுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் இதேபோல் அந்த படத்தின் ஷூட்டிங்கில் தல அஜித் திடீர் விசிட் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.