சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாள்.. மலர் தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்

Kathick
in பிரபலங்கள்Report this article
தவெக விஜய்
நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தை ஜனநாயகன் படத்துடன் முடித்துக்கொண்டு, முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மூலம் 2026 தமிழக தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்
இன்று சட்டமேதை பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் ஆகும். நாடு முழுவதும் இவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
பட்டியல் இன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி, சமூக நீதியுடன் இந்திய சட்டத்தில் புரட்சி செய்தவர் அண்ணல் அம்பேத்கர். இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவரும் ஆவார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொள்கை தலைவரான அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று என்பதால், அவருக்கு மரியாதை செய்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய்.
பாலவாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி தனது மரியாதையை செய்துள்ளார். இதுகுறித்து விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் "நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்".
இதோ அந்த பதிவு..
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 14, 2025
சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும்… pic.twitter.com/JTS2U0Ue4v