மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலியை செலுத்திய நடிகர் விஜய்..
மனோஜ்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது தந்தை பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மகால்' படம் மூலம் 1999ல் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து படங்கள் நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின் வாய்மை, ஈஸ்வரன், மாநாடு போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் 'மார்கழி திங்கள்' எனும் திரைப்படத்தை கடைசியாக இவர் இயக்கியிருந்தார். திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்
மேலும் கார்த்தி, சூர்யா, சீமான், வைரமுத்து ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில், தற்போது நடிகரும், தவெக தலைவருமான தளபதி விஜய், நேரில் சென்று மனோஜின் உடலுக்கு இறுதி மரியாதை செய்து பாரதிராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மனோஜின் உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்திய வீடியோ :
மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்! | #RIPManoj #ripmanoj #ripmanojbharathiraja #vijay #manojbharathiraja #cineulagam pic.twitter.com/cSnJ3DAPEk
— Cineulagam (@cineulagam) March 26, 2025