சிக்ஸு.. சிக்ஸு.. கிரிக்கெட் போட்டியில் டீமுக்காக சண்டை போட்ட விஜய்
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
டைம் ட்ராவல் அடிப்படையில் தான் இந்த படத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது. அதை பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் உறுதி செய்யும் வகையில் தான் இருந்தது.

கிரிக்கெட்
நடிகர் விஜய் தற்போது படக்குழு உடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. வாரிசு பட ஷுட்டிங்கில் எடுத்த வீடியோ தான் அது.
அதில் விஜய் ஒரு பந்து சிக்ஸ் சென்றதாக தனது டீமுக்காக மற்றவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
வீடியோ இதோ..
Thalapathy @actorvijay - cute fight for our team is Wholesome ??❤️
— Vivek (@Lyricist_Vivek) January 9, 2024
‘Sixxxu.. Sixu Sixu’ @iamRashmika @iYogiBabu @ActorShaam @directorvamshi pic.twitter.com/1SzjyP7LMK