மீண்டும் இணையும் நடிகர் விஜய்-பிரபுதேவா காம்போ..தெறிக்கப்போகும் திரையரங்குகள்!

vijay Prabu deva thalapathy 66
By Jeeva Nov 16, 2021 07:40 AM GMT
Report

90களில் பல படங்களில் ஹீரோவாக நடித்து தன் தனித்துவமான நடன அசைவால் ரசிகர்களை பெருமளவு ஈர்த்தவர் நடிகர் பிரபு தேவா. இந்திய அளவில் தன் நடன ஸ்டைலிற்காகவே 'இந்தியாவின் மைக்கல் ஜாக்சன்' என்றழைக்கப்படுகிறார்.

நடிப்பு மட்டுமல்லாமல் படங்கள் இயக்குதல், ஸ்டார்களின் படங்களில் நடன இயக்குனாராக கலக்கலான நடன காட்சிகள் அமைத்தல் என பன்முக தன்மை கொண்டவர் இவர்.

தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு ஹிந்தி என வேற்றுமொழி படங்களிலும் படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார்.

பிரபுதேவா நடிப்பில் தமிழில் பொன்மாணிக்கவேல் எனும் படம் வருகிற 19-ந் தேதி வெளியாகவுள்ள நிலையில் இவரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.

இவரும் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் தளபதி விஜய்யும் அடுத்த படத்தில் இணையப்போவதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பிரபு தேவா இயக்கத்தில் நடிகர் விஜய் போக்கிரி மற்றும் வில்லு படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர்கள் இணைய போகும் இந்த புதிய படத்தில் பிரபுதேவா நடன இயக்குனராக ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இந்த காம்போவில் உருவாகபோகும் நடன காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறாரகள்.

    

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US