போக்கிரி, வில்லு படங்களுக்கு பிறகு பல வருடங்கள் கழித்து இணையும் விஜய் - பிரபுதேவா..
பல வருடங்களுக்கு பின் இணையும் கூட்டணி
தமிழ் சினிமாவின் நடிகராகவும், நடன இயக்குனராகவும், இயக்குனராகவும் பெயர் பெற்றவர் பிரபு தேவா.
தளபதி விஜய்யை வைத்து பிரபு தேவா கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் போக்கிரி, தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான போக்கிரி இங்கு பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
அப்படத்தை தொடர்ந்து மீண்டும் அவர்கள் 2009 ஆம் ஆண்டு இணைந்த திரைப்படம் வில்லு, ஆனால் அப்படம் பெரியளவில் வெற்றியடைய தவறியது.
இந்நிலையில் தற்போது இவர்கள் மீண்டும் பல வருடங்கள் கழித்து இணையவுள்ளனர். ஆம் தற்போது தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வருகிறது தளபதி 66.
இப்படத்தில் பிரபு தேவா ஒரு பாடலுக்கு நடன அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 பாடல்கள் படமாக பட்டுள்ளதாகவும் அதில் ஒன்றிற்கு பிரபு தேவா நடனமைத்துள்ளாராம்.

வசூலில் வலிமையை நெருங்கும் டான், செம்ம மாஸ் சிவகார்த்திகேயன்