விஜய் படத்தால் நஷ்டத்தை சந்திக்கவிருக்கும் தயாரிப்பாளர்.. கடும் சோகத்தில் தில் ராஜு
வாரிசு
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
சோகத்தில் தில் ராஜு
இந்நிலையில், வாரிசு படத்திற்கு போட்டியாக தற்போது அஜித் நடிக்கும் துணிவு படமும் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இரு படமும் ஒன்றாக வெளியாவதால் கண்டிப்பாக தமிழகத்தில் வாரிசு திரைப்படத்தின் வசூல் பாதிக்கு பாதியாக குறைய வாய்ப்பு உண்டு.

இதனால் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் சோகத்தில் உள்ளாராம். அதே போல் தெலுங்கிலும் வாரிசு வெளியாகும் அதே நாளில் பிரபாஸின் ஆதிபுருஷ், சிரஞ்சீவியின் 154வது படமும், பாலக்ரிஷ்ணாவின் 107வது படமும் வெளியாகும் என தெரியவந்துள்ளது.

இதனால், தெலுங்கிலும் பல மடங்கு வாரிசு படத்தின் வசூல் குறையும் என்று தெரியவந்துள்ளது. இந்த அணைத்து செய்தியும் தயாரிப்பாளர் தில் ராஜுவிற்கு ஷாக் கொடுத்துள்ளதாம்.
நஷ்டத்தை சந்திக்குமா
வாரிசு படத்தின் மூலம் பெரும் தொகையை வசூலிதந்துவிடலாம் என்று எண்ணிய தயாரிப்பாளருக்கு இது பெரும் அதிர்ச்சி தான் என்றும், ஒருவேலை இத்தனை படங்கள் ஒரே நேரத்தில் வெளிவருவதால் வாரிசு படம் நஷ்ட்டதை சந்திக்குமோ என்றும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.