விஜய் பிரச்சார கூட்டத்தில் 38 பேர் பலி.. நடிகர் ரஜினி உள்ளிட்ட பிரபலங்களின் இரங்கல் பதிவு
நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரம் இன்று கரூரில் நடைபெற்ற போது அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி 38 பேர் பலியாகி இருக்கின்றனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த் சம்பவம் பற்றி தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருக்கிறது. பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.
ரஜினி இரங்கல்
38 பேர் பலியான இந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினி இரங்கல் தெரிவித்து இருக்கிறார். "கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்" என ரஜினி பதிவிட்டு இருக்கிறார்.
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
— Rajinikanth (@rajinikanth) September 27, 2025
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.#Karur #Stampede
பிரபலங்களின் இரங்கல் பதிவு
மேலும் மற்ற சினிமா பிரபலங்களின் இரங்கல் பதிவுகள் இங்கே.
கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன்.
— G.V.Prakash Kumar (@gvprakash) September 27, 2025
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்.
நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் . 😭
நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 27, 2025
நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும்,…
கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது
— Deputy CMO, Andhra Pradesh (@APDeputyCMO) September 27, 2025
தமிழகத்தின் கரூரில் நடிகரும், தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவருமான திரு. விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆரம்பகட்ட தகவலின்படி, இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.…