நடிகர் விஜய்யின் ரீல் தங்கையா இது! கணவர், குழந்தைகளுடன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
தங்கை பாசத்தை மையமாக வைத்து நடிகர் விஜய் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். சிவகாசி, திருப்பாச்சி, வேலாயுதம் ஆகிய படங்களை எடுத்துக்காட்டாக கூறலாம்.
சரண்யா மோகன்
இதில் மோகன் ராஜா இயக்கத்தில் தங்கை பாசத்தையும், சூப்பர் ஹீரோ கதைக்களத்திலும் உருவான திரைப்படம் தான் வேலாயுதம். இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிகை சரண்யா மோகன் என்பவர் நடித்திருந்தார்.

இவர் தனுஷின் யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் சரண்யா நடித்துள்ளார்.

கணவர், குழந்தைகளுடன் விஜய்யின் தங்கை
கடந்த 2015ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் செட்டிலான நடிகை சரண்யா மோகனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை சரண்யா மோகன் தனது கணவர் அரவிந்த் மற்றும் மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri