இயக்குனரின் முடிவை மறுத்த விஜய்.. காரணம் இதுதான்
வாரிசு
வம்சி இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா இப்படத்தில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் வெளிவந்த இப்படம் First லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதை நாம் அறிவோம்.

இயக்குனரின் முடிவை மறுத்த விஜய்
விஜய்யின் பிறந்தநாளை, வாரிசு படத்தின் படக்குழு அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஆனால், விஜய்யின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பிற்கு விடுமுறை விட வேண்டும் என்று இயக்குனர் வம்சி கூறியுள்ளாராம்.
ஆனால், அதை மறுத்த நடிகர் விஜய், வேண்டாம் எனக்காக படப்பிடிப்புக்கு விடுமுறை விட வேண்டாம். படப்பிடிப்பு நடக்கட்டும் என்று கூறியுள்ளாராம்.