வெற்றி இயக்குனரை இரண்டு முறை வேண்டாம் என நிராகரித்த தளபதி விஜய்.. ஆனால் தற்போது
நிராகரித்த விஜய்
பிரபல இயக்குனர் ஒருவர் நடிகர் விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளார். ஒரே முறையல்ல, இரண்டு முறை நடிகர் விஜய்க்கு இவர் கதை கூறியுள்ளாராம்.
ஆனால், இரண்டு முறையும் தன்னை விஜய் நிராகரித்துவிட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் தான்.
ஆம், இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இரண்டு முறை நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து கதை கூறியிருக்கிறார். ஆனால், எதோ ஒன்று சரியில்லை என்ற காரணத்தினால் இருவரும் இதுவரை இணையாமல் இருந்துள்ளனர்.
தளபதி 69
இந்த கம்போ எப்போது இணையும் என்று ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். அந்த நேரம் வந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
ஆம், தளபதி 68 படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 69. இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்நிலையில், தளபதி விஜய் - சன் பிச்சர்ஸ் - கார்த்திக் சுப்ராஜ் கூட்டணியில் தளபதி 69 திரைப்படம் உருவாகவுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என்று.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
