விஜய் இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா? தளபதி 66 பற்றி வந்த தகவலால் ரசிகர்கள் ஷாக்
நடிகர் விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கி வரும் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இயக்குனரே கதை பற்றி பேசும்போது எமோஷனுக்கு தான் கதையில் அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது விஜய் ரோல் பற்றி ஒரு புது தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் தளபதி 66 படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கப்போகிறார் என்பது தான் அது.
பீஸ்ட் படத்தில் நடித்த ஹர்ஷிதா கார்த்திக் மற்றும் பெண்குயின் படத்தில் நடித்த அத்வைத் வினோத் ஆகியோர் தான் விஜய்யின் குழந்தைகளாக நடிக்கின்றனர். அவர்களே இன்ஸ்டாகிராமில் இந்த படத்தில் நடிப்பது பற்றி மகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கின்றனர்.
தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தளபதி 66 படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
