"தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின" - விஜய் தரப்பில் அளிக்கப்பட்ட பதில்..
நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி நடிகர் விஜய் குறித்து விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தனிநீதிபதியின் கருத்துகளை நீக்கக்கோரி விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் விஜய் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில் "இறக்குமதி கார் விவகாரத்தில் தனி நீதிபதியின் கருத்துக்கள் என்னை தனிப்பட்ட வகையில் புண்படுத்தியுள்ளன.
கஷ்டப்பட்டு உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சிப்பது தேவையற்றது, என்னை தேச விரோதியாக கூறுவது தவறு; என் வழக்கு மட்டும் அல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் பொதுப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டது” என விஜய் தரப்பில் பதில்.

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
