பீஸ்ட் ஹிந்தியில் மட்டும் வேறு டைட்டில்! அர்த்தம் இதுதானா?
தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்காக விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். தற்போது ஹிந்தியில் மட்டும் இந்த படம் வேறு பெயரில் வர இருக்கிறது.
ஏப்ரல் 13 ரிலீஸ்
தமிழ் புத்தாண்டுக்கு ஒரு நாள் முன்பு ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கு அடுத்த நாள் கன்னட படமான கேஜிஎப் 2 வெளியாகிறது.
கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் அதிகம் எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
5 மொழிகளில் பீஸ்ட்.. ஹிந்தியில் வேறு பெயர்
தற்போது பீஸ்ட் படம் மொத்தம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்து இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் பீஸ்ட் வெளியாக இருக்கிறது.
ஹிந்தியில் மட்டும் படத்தின் பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது. 'ரா' என ஹிந்தியில் பெயர் சூட்டி இருக்கின்றனர். ரா உளவு அமைப்பை குறிக்கும் வகையில் தான் இப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டிருக்கும் என தெரிகிறது.