பீஸ்ட் படத்தின் பட்ஜெட்டில் 45% சதவீதத்தை சம்பளமாக வாங்கிய விஜய்.. ஆனால், படத்தின் நிலைமையோ
விஜய் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் பீஸ்ட்.
நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ளது. அதிகாலை 4 மணிக்கு திரைக்கு வந்த இப்படத்தை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்துகொண்டு இருந்தனர்.
முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு, திரையரங்கிற்கு வெளியே வந்த ரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
வசூலில் பாதிப்பு ஏற்படுமா?
இந்நிலையில், பீஸ்ட் படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 80 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். ரூ. 175 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்திலிருந்து 45% சதவீதத்தை சம்பளமாக பெற்றுள்ளார் விஜய்.
ஆனால், படத்தின் நிலைமையோ தற்போது மிகப்பெரிய தோல்வி என்று பலரும் கூறுகின்றனர். இதனால், வசூலில் பாதிப்பு ஏற்படுமா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.