விஜய்யின் வாரிசு
தெலுங்கு சினிமாவின் வெற்றி இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைப்பில் தயாராகி வருகிறது விஜய்யின் வாரிசு திரைப்படம்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து நடந்து வருகிறது, அடுத்தடுத்து வரும் ஸ்பெஷல் தினங்களில் வாரிசு படக்குழு நிறைய அப்டேட் கொடுத்து வந்தனர்.
தற்போது கூட வந்த தகவல் என்னவென்றால் வரும் டிசம்பர் 4ம் தேதி மாலை 4 மணிக்கு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக இருக்கிறதாம். இந்த செய்தி கேட்டதும் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.
நடிகரின் சம்பளம்
விஜய் பீஸ்ட் படத்திற்காக ரூ. 80 கோடி வரை சம்பளம் பெற்றிருந்த நிலையில் வாரிசு படத்திற்காக விஜய் ரூ. 125 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
அப்படத்திற்கும் இந்த புதிய படத்திற்கும் ரூ 45 கோடி அதிகமாகியுள்ளது.
ஆரம்பித்த ஹன்சிகா திருமண கொண்டாட்டம்- மெஹந்தி நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இதோ